மீண்டும் தள்ளிப்போன “டைட்டானிக்” பட ரிலீஸ்

அறிமுக இயக்குனர் ஜானகி ராமன் இயக்கத்தில் கலையரசன், கயல் ஆனந்தி நடிப்பில் ‘டைட்டானிக்’ படம் உருவாகியுள்ளது.
மீண்டும் தள்ளிப்போன “டைட்டானிக்” பட ரிலீஸ்
Published on: 

கலையரசன், கயல் ஆனந்தி நடித்த ‘டைட்டானிக்’ படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகுமென படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜானகிராமன் இயக்கத்தில், ‘டைட்டானிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயிண்ட்மென்ட் சார்பாக சிவி குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில், ‘டைட்டானிக்’ படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகுமென படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் “பல ஆண்டுகள் கடின உழைப்பு, பல தடைகளைத் தாண்டி, வெள்ளித் திரைக்கு வரவிருக்கிறோம். குறைவான திரைகள் கிடைத்ததால் அக்.23ஆம் தேதி வெளியாகவிருக்கிறோம். டைட்டானிக் ஒர் அழகான, மகிழ்ச்சியான, நகைச்சுவை கலந்த படம். இந்தப் படம் பள்ளியில் உங்களது முதல் காதலை ஞாபகப்படுத்தும் என்பதை உறுதியளிக்கிறேன். ஒரு படைப்பாளியாக எனது படம் உங்களது மனத்தைக் கவர்ந்து, உங்களது வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக மாறுவதை விடவும் எனக்கு பெரியது ஒன்றுமில்லை. உங்களது ஆதரவு படத்துக்குத் தேவை” என கூறியுள்ளார்.

‘டைட்டானிக்’ படம் இன்று வெளியாக இருந்தநிலையில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com