

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது பிரபல நடிகையான நஸ்ரியாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை முஹ்சின் பராரி இயக்குகிறார். இத்திரைப்படம் காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டுள்ளது. 'தல்லுமாலா' படத்திற்குப் பிறகு டோவினோவும் பராரியும் மீண்டும் இணையும் படமாக இது அமைகிறது.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் கேம்ப் நௌ மைதானத்தில் நடந்த பார்சிலோனா -ரியல் மாட்ரிட் எல் கிளாசிகோ போட்டியின் நடுவே டோவினோ தாமஸ் - நஸ்ரியா இருவரும் இணைந்து இந்த ('கிரேசியாஸ் எல் கிளாசிகோ') புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர். போட்டியின் நடுவே படத்தின் டைட்டிலை ரிலீஸ் செய்தது, கால்பந்து ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.