

மும்பை,
பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் டேட்டிங் வதந்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒருகாலத்தில் சிறப்பு பாடல்களில் கவர்ச்சியான நடனங்களால் பிரபலமான மலைக்கா, தற்போது தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கி மீண்டும் கவனம் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த “தம்மா” படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.
52 வயதானாலும் தனது பிட்னஸ் மற்றும் ஸ்டைலால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். அதே நேரத்தில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அடிக்கடி கவனம் ஈர்க்கிறது. ஏற்கனவே கணவருடன் விவாகரத்து பெற்ற மலைக்கா, நடிகர் அர்ஜுன் கபூரை காதலிப்பதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில், ஒரு தொழிலதிபருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று வதந்திகள் பரவின. இந்நிலையில், அதற்கு மலைக்கா பதிலளித்துள்ளார். “இப்படிபட்ட செய்திகள் ஆரம்பத்தில் என்னை பாதித்தன. ஆனால் தற்போது நானும் என் மகனும் இதைப் பார்த்து சிரிக்கிறோம்’ என்றார். மலைக்காவின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.