என் மனதை ஈர்த்துவிட்டது, டூரிஸ்ட் பேமிலி அற்புதமான படம்; மா.சுப்பிரமணியன் பாராட்டு


என் மனதை ஈர்த்துவிட்டது, டூரிஸ்ட் பேமிலி அற்புதமான படம்; மா.சுப்பிரமணியன் பாராட்டு
x

அமைச்சர் மா.சுப்பிரமணியன் டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குடும்ப கதையில் உருவாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் டூரிஸ்ட் பேமிலி படத்தை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "டூரிஸ்ட் பேமிலி என்ற படம் என் மனதை மிகவும் ஈர்த்தது. அக்கம் பக்கத்திலே இருப்பவரோடு மனிதாபிமான உறவோடும் பேரன்போடும் வாழும் வாழ்க்கையை போதிக்கிறது இப்படம். படத்தின் நாயகன் சசிகுமார் பேரன்பும், இரக்கமும், உதவும் குணமும் உள்ளவராய் நடித்துள்ளார்…இல்லை.. இல்லை வாழ்ந்தே காட்டியுள்ளார்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதைக்காட்டும் அற்புதமான படம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்கும் இயல்புடைய நான் இன்று மதியம் குடும்பத்தினருடன் சென்று படம் பார்த்தேன். படம் முடிந்து வெளிவந்தவுடன் நடிகர் சசிகுமார் அவர்களிடமும், இயக்குனர் அபிசன் ஜீவிந்த் அவர்களிடமும் அலைபேசியின் வாயிலாக என்னுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொண்டேன்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story