6 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்த டோவினோ தாமஸின் “அதிரடி”

பாசில் ஜோசப், டோவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் இணைந்து நடித்த ‘அதிரடி’ படம் கடந்த 14 ம் தேதி வெளியானது.
6 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்த  டோவினோ தாமஸின் “அதிரடி”
Published on

பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள ‘அதிரடி’ படத்தை அருண் அனிருத்தன் இயக்கியுள்ளார். அருண் அனிருத்தன் ‘மின்னல் முரளி’ திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.

அனந்து, சமீர் உடன் இணைந்து பாசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். மலையாளத்தில் பிரபல நடிகர்களாக இருக்கும் பாசில் ஜோசப், டோவினா தாமஸ், இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் நடிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் வெற்றியடைந்த ‘லோகா’ படத்தில் டோவினோ தாமஸ் கவுரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.‘அதிரடி’ படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். கல்லூரி பின்னணியில் உருவான இதில் நாயகனாக பாசில் ஜோசப் நடிக்க, வில்லனாக டொவினோ நடித்துள்ளார்.

இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான ‘அதிரடி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக 6 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழிலும் இப்படம் இன்று திரையில் வெளியானது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com