சிறந்த நடிகருக்கான விருதை வென்ற டோவினோ தாமஸ்!

ஏஆர்எம், அன்வெஷிப்பின் கண்டெத்தும் ஆகிய படங்களுக்காக டோவினோ தாமஸுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
கொச்சி,
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பிருத்விராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'எல் 2 எம்புரான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், 2024-ம் ஆண்டிற்கான 48-வது கேரள திரைப்பட விமர்சகர்கள் விருது வழங்கும் விழாவில் "ஏஆர்எம் மற்றும் அன்வெஷிப்பின் கண்டெத்தும்" ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருது டோவினோ தாமஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






