சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பின் போது நடந்த விபரீதம்

ராமநாதபுரம் கடற்பகுதியில் நடிந்துவரும் "மண்டாடி" படப்பிடிப்பின் போது படக்குழு சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.
சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பின் போது நடந்த விபரீதம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மாமன்' படம் வெளியானது. குடும்ப கதைக்களத்தில் வெளியான இந்த படத்தினை பிரசாந்த் பண்டிராஜ் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி தனது அடுத்த படமாக "மண்டாடி" என்ற படத்தில் நடித்து வருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் நடிகர் சுஹால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், "மண்டாடி" படத்தில் படப்பிடிப்பு பணிகள் ராமநாதபுரத்தின் தொண்டி என்கிற கடற்பகுதியில் நடந்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக படக்குழுவினர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த இரண்டு பேர் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கினர். இவர்களை போராடி மீட்டனர். இந்த விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இருந்தபோதிலும், படகுடன் சேர்ந்து, படப்பிடிப்புக்கு பயன்படுத்திய கேமராக்கள் உள்பட சில சாதனங்கள் கடலில் மூழ்கியுள்ளது. இதனால், படக்குழுவிற்கு ரூ.1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com