நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடித்த 'ரைட்' படத்தின் டிரெய்லர் அப்டேட்


நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடித்த ரைட் படத்தின் டிரெய்லர் அப்டேட்
x
தினத்தந்தி 17 Sept 2025 3:45 PM IST (Updated: 17 Sept 2025 3:45 PM IST)
t-max-icont-min-icon

அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கிய ரைட் படம் வருகிற 26ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்டி எனும் நட்ராஜ், அருண் பாண்டியன் இணைந்து நடித்துள்ள படம் ‛ரைட்'.இது திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இதில் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்தவி இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை ஏற்பட்டால் என்னவாகும் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் ஒரு கமர்ஷியல் திரில்லர் ஆகும்.

இப்படம் வருகிற 26ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

1 More update

Next Story