'ஒரு படத்தை தேர்ந்தெடுக்கும்போது நான் கவனிக்கும் இரண்டு விஷயங்கள்' - 'ஜோ' பட நடிகர் ரியோ ராஜ்


Two things I look for when choosing a film - Joe actor Rio Raj
x

ஒரு படத்தை தேர்ந்தெடுக்கும்போது இரண்டு விஷயங்களை கவனிப்பதாக ரியோ ராஜ் கூறியுள்ளார்.

சென்னை,

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ரியோ ராஜ், கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்திலும் ஹீரோவாக நடித்து கவனம் பெற்றார்.

கடந்த ஆண்டு வெளியான 'ஜோ' திரைப்படம் ரியோ ராஜுக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. தற்போது இவர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'ஸ்வீட்ஹார்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை வெளியாகாதநிலையில், ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், ஒரு படத்தை தேர்ந்தெடுக்கும்போது இந்த இரண்டு விஷயங்களை கவனிப்பதாக ரியோ ராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'பார்வையாளர்களின் மனநிலையுடன் ஸ்கிரிப்டை நான் கேட்கிறேன். அதன்படி, அதை தேர்ந்தெடுக்கும்போது நான் இரண்டு விஷயங்களை கவனிப்பேன். ஒன்று, அது என்னை உற்சாகப்படுத்துகிறதா? என்பது, இரண்டாவது, அந்த கதாபாத்திரத்தில் நான் நன்றாக இருப்பேனா? என்பது' என்றார்.


Next Story