காதல் அதிகமானால் வாழ்க்கை நரகமா?... ஆர்வத்தை தூண்டும் ‘அக்லி ஸ்டோரி’ டிரெய்லர்

இப்படம் வருகிற 22-ம் தேதி வெளியாக உள்ளது.
காதல் அதிகமானால் வாழ்க்கை நரகமா?... ஆர்வத்தை தூண்டும் ‘அக்லி ஸ்டோரி’ டிரெய்லர்
Published on

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் நந்து, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கும் அவரது நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் 'அக்லி ஸ்டோரி'.

பிரணவ் ஸ்வரூப் இயக்கி உள்ள இப்படத்தில் அவிகா கோர் கதாநாயாகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 22-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், அதன் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடிகர் நந்து ஒரு சைக்கோ போன்ற கதாபாத்திரத்தில், எதிர்மறையான (Negative Shades) நிழல்களில் மிரட்டியிருக்கிறார்.

Also Read
"நடிப்பிலிருந்து ஓய்வு "... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை - உருக்கமான பதிவு
காதல் அதிகமானால் வாழ்க்கை நரகமா?... ஆர்வத்தை தூண்டும் ‘அக்லி ஸ்டோரி’ டிரெய்லர்

டிரெய்லரை பார்க்கும்போது காதல் மற்றும் திருமணத்தில் இருக்கும் இருண்ட பக்கங்களை (Toxic Relationship) இந்தப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டும் எனத் தெரிகிறது. நந்துவின் இந்த வித்தியாசமான முயற்சி அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com