‘பிரின்ஸ்’ நடிகையின் புதிய படம் - கவனம் ஈர்க்கும் பர்ஸ்ட் லுக்

உக்ரைன் திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மரியா ரியாபோஷாப்கா.
‘பிரின்ஸ்’ நடிகையின் புதிய படம் - கவனம் ஈர்க்கும் பர்ஸ்ட் லுக்
Published on

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ். இவர் கடந்த ஆண்டு ’பைரவம்’ படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும், அடுத்து அவர் நடித்த ’மிராய்’ பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மஞ்சு மனோஜ் வில்லனாக நடித்திருந்த இந்த படம் ரூ. 300 கோடி வசூல் செய்தது.

இப்போது அவர், ’டேவிட் ரெட்டி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த பீரியட் ஆக்சன் திரில்லரை ஹனுமா ரெட்டி யக்காந்தி இயக்குகிறார். சமீபத்தில், படத்தின் ஹீரோயினை பற்றிய முக்கிய தகவலை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

அதன்படி, உக்ரேனிய நடிகை மரியா ரியாபோஷாப்கா ’க்ளாரா வித்மோர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அவர் பிரிட்டிஷ் கேர்ல்போல் தோற்றமளித்துள்ளார்.

Also Read
நேர்மையான பாராட்டுகள் கிடைப்பது அரிது - நடிகர் சமுத்திரக்கனி
‘பிரின்ஸ்’ நடிகையின் புதிய படம் - கவனம் ஈர்க்கும் பர்ஸ்ட் லுக்

உக்ரைன் திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் நடிகையாக அறிமுகமான மரியா, இந்திய திரையுலகில் ‘ஸ்பெஷல் ஓப்ஸ் 1.5’ வெப் சீரிஸுடன் அறிமுகமானார். பின்னர் தமிழில் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com