உமாபதி ராமையாவின் “டிஎன் 2026” படத்தின் டீசர் வெளியானது

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நடித்துள்ள ‘டிஎன் 2026’ படம் நாளை வெளியாகிறது.
உமாபதி ராமையாவின் “டிஎன் 2026” படத்தின் டீசர் வெளியானது
Published on

சென்னை,

கண்ணன் ரவி குழு மற்றும் கந்தரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள “டிஎன் 2026 தங்க நட்சத்திரம்” படத்துக்கு, தர்புகா சிவா இசையமைத்துள்ளார். அரசியல் பின்னணியுடன் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சாண்டி நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடராஜ் (நட்டி), எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ஸ்ரீத்தா ராவ், விஜி சந்திரசேகர், கிங்காங், தேவி மகேஷ், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி மற்றும் இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா, நடிகராக அறிமுகமாகி தற்போது இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்குகிறார்.

இந்நிலையில், உமாபதி ராமையா இயக்கத்தில் உருவாகி உள்ள “டிஎன் 2026 தங்க நட்சத்திரம்” திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com