ஊர்வசி, 'அட்டகத்தி' தினேஷ் நடித்துள்ள 'ஜே பேபி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'ஜே பேபி' படத்தை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கியுள்ளார்.
ஊர்வசி, 'அட்டகத்தி' தினேஷ் நடித்துள்ள 'ஜே பேபி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'ஜே பேபி'. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஊர்வசி, 'அட்டகத்தி' தினேஷ், மாறன், கவிதா பாரதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

'ஜே பேபி' படத்துக்கு 'யு சான்றிதழ்' வழங்கப்பட்டுள்ளது. ஒரு கட் கூட கொடுக்காமல், ஒரு வசனத்தை கூட மியூட் பண்ணாமல் தணிக்கைக்குழு 'யு சான்றிதழ்' வழங்கியுள்ளதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'ஜே பேபி' திரைப்படம் வருகிற மார்ச் 8-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com