நடிகர் பார்த்திபனின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்ட 'உஸ்தாத் பகத் சிங்' படக்குழு

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள 'உஸ்தாத் பகத் சிங்' படம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

நடிகர் பார்த்திபனின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்ட 'உஸ்தாத் பகத் சிங்' படக்குழு
Published on

சென்னை,

ஹரி ஹர வீரமல்லு படத்தை தொடர்ந்து ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் அடுத்ததாக ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் சங்கர் இயக்கி வருகிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பவன் கல்யாண் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் ஆக்ஷன் மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகி வருகிறது.

உலகளவில் வரும் மார்ச் 26ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பார்த்திபன் அவர்களின் கதாபாத்திர போஸ்டரை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்படத்தில் பார்த்திபன் ‘நல்ல நாகப்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான போஸ்டரில் தனித்துவமான தோற்றத்தில் அவர் இடம்பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதனை தொடர்ந்து ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com