ஐகோர்ட்டு போட்ட உத்தரவால் "வா வாத்தியார்" படத்திற்கு சிக்கல்

கார்த்தியின் "வா வாத்தியார்" படம் வருகிற 12ந் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய காபபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகிறது.
இதற்கிடையில், படத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டில் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தங்களிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் ரூ.10 கோடியே 35 லட்சம் கடன் பெற்றது. இந்த தொகையை செலுத்தம் வரை படத்திற்கு தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில்.புதிய சிக்கல் வந்துள்ளது. அதாவது, அர்ஜூன்லால் என்பவரிடம் கடனாக பெற்ற பணத்தை செலுத்துவது குறித்து நாளைக்குள் பதிலளிக்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.






