வருண் தேஜின் “கொரியன் கனகராஜு” படத்தின் டிரெய்லர் வெளியானது

மெர்லபாகா காந்தி இயக்கத்தில் வருண் தேஜ், ரித்திகா நடித்துள்ள ‘கொரியன் கனகராஜு’ படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வருண் தேஜின் “கொரியன் கனகராஜு”  படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

தெலுங்கு நடிகர் வருண் தேஜ் நடித்துள்ள ‘கொரியன் கனகராஜு’ என்ற படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ். இவர் கடந்த 2014-ல் வெளியான ‘முகுந்தா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். லோபர், பிதா, எப்2 ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. நடிகை லாவண்யா திரிபாதியை 2023ல் திருமணம் செய்தார். வருண் தேஜ் நடிப்பில் வெளியான ‘மட்கா’ திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருண் தேஜின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கொரியன் கனகராஜு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை மெர்லபாகா காந்தி இயக்கியுள்ளார். இதனை பர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஸன் இணைந்து தயாரிக்கிறது. தமன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்திய - கொரியன் பாணியிலான நகைச்சுவை கலந்து ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. ரித்திகா நாயக் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வருண் தேஜ் நடித்துள்ள ‘கொரியன் கனகராஜு’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், வருண் தேஜ் நடித்துள்ள ‘கொரியன் கனகராஜு’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com