“மங்காத்தா” படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த வெங்கட் பிரபு

அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம் வரும் 23ம் தேதி ரீ- ரிலீஸாகிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த படம் ‘மங்காத்தா’.அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் என பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றிப்படமாக ‘மங்காத்தா’ அமைந்து இருந்தது.
இப்படத்தில் நடிகர் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் . திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த நடிகர் அஜித்துக்கு ‘மங்காத்தா’ படம் பெரும் 'கம்பேக்'காக அமைந்தது. அதற்கு காரணம் அஜித்தின் கதாபாத்திரமும், பின்னணி இசையும் தான். கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் ‘மங்காத்தா’.இத்திரைப்படம் வரும் 23ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இத்திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி வைரலானது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மங்காத்தா ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ‘மங்காத்தா’ படம் ரீ-ரிலீஸ் ஆவதை ஒட்டி அப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்களை இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அஜித்தின் ‘மங்காத்தா’ படம் ரீ-ரிலீஸ் முன்பதிவில் இதுவரை ரூ. 60 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






