வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' படப்பிடிப்பு நிறைவு - வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு

‘கஸ்டடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை வீடியோ ஒன்றின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கட் பிரபுவின் 'கஸ்டடி' படப்பிடிப்பு நிறைவு - வீடியோ வெளியிட்டு அறிவித்த படக்குழு
Published on

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படம் வருகிற மே 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை வீடியோ ஒன்றின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு இறுதி நாளில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ, ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகிறது. 

venkat prabhu (@vp_offl) February 24, 2023 ">Also Read:

X

Daily Thanthi
www.dailythanthi.com