கிரைம் - திரில்லரில் 'விடியும் காத்திரு' படம்.. எம்.எஸ்.பாஸ்கரின் புதிய பரிமாணம்

இயக்குநர் ஆர்.அரவிந்தராஜன் தனது முதல் படைப்பாக இந்தபடத்தை இயக்கியுள்ளார்.

கிரைம் - திரில்லரில் 'விடியும் காத்திரு' படம்.. எம்.எஸ்.பாஸ்கரின் புதிய பரிமாணம்
Published on

சென்னை,

ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக் கதையில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள 'விடியும் காத்திரு' படம் விரைவில் வெளியாக உள்ளது.

கிரைம் - திரில்லரில் எம்.எஸ்.பாஸ்கர்

வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், தற்போது 'விடியும் காத்திரு' என்ற புதிய கிரைம் - திரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆர்.அரவிந்தராஜனின் முதல் படைப்பு

பிரண்ட்ஸ் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் பி.எம்.ரவிச்சந்திரன் தயாரிப்பில், பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோரிடம் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர்.அரவிந்தராஜன் தனது முதல் படைப்பாக இயக்குகிறார். முதன்மை கதாபாத்திரத்தில் அம்ஜதா ஷெரின் நடிக்கிறார். மேலும் கோபி அயோத்தி, பேபி ஸ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்க, ஜி.தாமோதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

காவல் அதிகாரிகளும், அமானுஷ்யமும்

ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக் கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகள் அங்கு அமானுஷ்ய சம்பவங்களை எதிர்கொள்கிறார்கள். இதன் பின்னணியை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

விரைவில் ரிலீஸ்

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com