

சென்னை,
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'சங்க்ராந்திக்கு வஸ்துன்னாம்' (Sankranthiki Vasthunam). அனில் ரவிபுடி இயக்கத்தில் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவான இதில், வெங்கடேஷ் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மனைவியாகவும், மீனாட்சி சவுத்ரி முன்னாள் காதலியாகவும் நடித்திருந்தனர்.
தற்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதை பிரபல இயக்குனர் அனீஸ் பாஸ்மி இயக்க தெலுங்கில் தயாரித்த தில் ராஜுவே இந்தி ரீமேக்கையும் தயாரிக்கிறார்.
தெலுங்கில் வெங்கடேஷ் நடித்த கதாபாத்திரத்தில் அக்சய் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கதாபாத்திரத்தில் வித்யா பாலன் மறும் மீனாட்சி சவுத்ரி நடித்த கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இந்தி ரீமேக் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.