'சூர்யா 46' படத்தில் கேமியோ ரோலில் விஜய் தேவரகொண்டா

சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
சென்னை,
நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இந்த நிலையில், சூர்யா 46 படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டோ கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், ஐதராபாத்தில் நடைபெற்ற 'ரெட்ரோ' படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






