பிக்பாஸ் பிரஜின் படத்தை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

இந்த படத்தில் பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
பிக்பாஸ் பிரஜின் படத்தை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி
Published on

சென்னை,

யோகேஷ்வரன் மைனர் இயக்கத்தில் உருவாகும் படம் ஊருக்கு ரெண்டு ஊதாரி. இந்த படத்தில் பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் ஜனனி விக்ரம் விஜய், ரவி மரியா, மைம் கோபி, தீபா, அபிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சுப்பிரமணிய சிவா, நடிகர் சவுந்தர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்படம் பற்றி இயக்குனர் யோகேஷ்வரன் பேசுகையில், இது முழுக்க முழுக்க காமெடி டிராமாவாக உருவாக்க இருக்கிறோம். பொதுவாகவே ஊருக்கு ரெண்டு ஊதாரி இருப்பார்கள், ஆனால் ஒரே வீட்டில் ரெண்டு ஊதாரி இருந்தால் என்ன நடக்கும் என்பதை வைத்து சுவாரஸ்ய மான முழு நீள காமெடி படமாக எடுக்கவிருக்கிறோம்.

கடந்த 10 வருடங்க ளாக ஒரே அடிதடி, வெட்டு குத்து படங்களாகவே வருகின்றன. சினிமா ரசிகன் அந்த 2 மணிநேரம் தன்னை மறந்து சிரித்து மகிழவேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறான். அப்படி சினிமா ரசிகனை முழு என்டர்டெயின்மென்ட் செய்யும் படமாக இது இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com