263 திரையரங்குகளில் ரீ-ரிலீஸான விஜய்யின் “குஷி” திரைப்படம்

இன்று 263க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ள ‘குஷி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது .
263 திரையரங்குகளில் ரீ-ரிலீஸான விஜய்யின் “குஷி” திரைப்படம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு மே 19ம் தேதி வெளியான படம் குஷி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்தினை எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார். விவேக், மும்தாஜ், விஜயகுமார் ஆகியோரும் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக சொல்லப்போனால் விஜய் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக இப்படம் அமைந்தது எனலாம். இந்த படம் உலகளவில் ரூ. 22 கோடிக்கு மேல் அப்போதே வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்திருக்கிறது. 

இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் படத்தை இன்று 263க்கும் அதிகமான திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்துள்ளது. குஷி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது . சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் குஷி படத்திற்கு வந்த ரசிகர்கள் திரையரங்கை திருவிழா கொண்டாட்டமாக மாற்றியுள்ளார்கள். கர்நாடகாவில் குஷி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 

இப்படம் முதல் நாள் பிரீ புக்கிங்கில் ரூ. 35 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் கில்லி படம் ரீ-ரிலீஸில் மிகப்பெரிய வசூலைப் பெற்றதுபோல் இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com