'மெய்யழகன்' பட இயக்குனரிடம் கதை கேட்ட விக்ரம்


மெய்யழகன் பட இயக்குனரிடம் கதை கேட்ட விக்ரம்
x
தினத்தந்தி 24 May 2025 7:43 PM IST (Updated: 1 Jun 2025 12:06 PM IST)
t-max-icont-min-icon

இயக்குனர் பிரேம்குமார் விக்ரம் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் கடந்த மாதம் 'தீர வீர சூரன் 2' படம் வெளியானது. மதுரையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து விக்ரம் 'மண்டேலா', 'மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'விக்ரம் 63' என பெயரிடப்பட்டுள்ளது. 'மாவீரன்' படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவுள்ளது.

இதற்கிடையில், நடிகர் விக்ரமின் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, 'மெய்யழகன், 96' போன்ற படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, விக்ரம் இயக்குனர் பிரேம்குமாரிடம் கதை கேட்டு உள்ளதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இவர்களது கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story