விக்ரம் பிரபுவின் "லவ் மேரேஜ்" பட ரிலீஸ் அப்டேட்

அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் மேரேஜ்' படத்தில் சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விக்ரம் பிரபுவின் "லவ் மேரேஜ்" பட ரிலீஸ் அப்டேட்
Published on

சென்னை,

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'கும்கி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு . அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான 'டாணாக்காரன், இறுகப்பற்று, சிகரம் தொடு, இவன் வேற மாதிரி' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர் தற்போது அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளர். இதில் கதாநாயகியாக 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புகழ் நடிகை சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின.

திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, வருகிற ஜூன் மாதம் இந்த படத்தினை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com