மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கும் விமல்

நடிகர் விமல் மலையாளத்தில் வெளியான 'ஜென்.இ.மேன்' என்ற படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கும் விமல்
Published on

சென்னை,

நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் விமல் 'பரமசிவன் பாத்திமா மற்றும் தேசிங்குராஜா 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2021-ம் ஆண்டில் வெளியான 'ஜென்.இ.மேன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் விமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் இயக்கினார். இதில் பசில் ஜோசப், லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 'ஜென்.இ.மேன்' படத்தை தமிழ் மொழியில் சிதம்பரத்தின் உதவி இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com