வைரலாகும் புகைப்படங்கள்... இரட்டை குழந்தையுடன் மும்பை சென்ற நயன்தாரா

வைரலாகும் புகைப்படங்கள்... இரட்டை குழந்தையுடன் மும்பை சென்ற நயன்தாரா
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கடந்த வருடம் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.

வாடகைத்தாய் சட்ட விதிமுறைகளை மீறி குழந்தைகளை நயன்தாரா பெற்று இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின. சுகாதார துறை விசாரணை நடத்தி விதிமுறைப்படியே இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர் என்று விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மும்பை விமான நிலையத்தில் ஆளுக்கொரு குழந்தையை தோளில் சாய்த்தபடி கொண்டு செல்லும் வீடியோவும் புகைப்படமும் வெளியாகி உள்ளன. குழந்தைகளின் முகம் வீடியோவில் தெரியாதபடி மறைத்து தூக்கி செல்கிறார்கள்.

இதுவரை தங்களுடைய இரட்டை குழந்தைகளை வெளியில் எங்கும் எடுத்து செல்லாத நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி முதல் முறையாக தற்போது தங்களுடைய இரட்டை குழந்தைகளை வெளியுலகிற்கு காட்டி உள்ளனர்.

இந்தியில், ஷாருக்கானுக்கு ஜோடியாக 'ஜவான்' படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகவே கணவர் மற்றும் குழந்தைகளுடன் நயன்தாரா மும்பை சென்றுள்ளார் என்றும், படப்பிடிப்பு முடிந்த பிறகு சென்னை திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com