ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்த விஷால்

நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்த விஷால்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் தற்போது காதலித்து வருகின்றனர். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். சமீப காலமாக விஷால் ஜிம்மில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com