விஷ்ணு விஷால் நடிக்கும் “ஆர்யன்” படத்தின் முதல் பாடல் வெளியானது

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற 31ம் தேதி வெளியாகிறது.
விஷ்ணு விஷால் நடிக்கும் “ஆர்யன்” படத்தின் முதல் பாடல் வெளியானது
Published on

சென்னை,

வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆர்யன். இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஆர்யன் படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31ம் தேதி வெளியாகிறது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 இந்நிலையில், ஆர்யன் படத்தின் முதல் பாடல் வெளியானது. கொல்லாதே கொள்ளை அழகாலே பாடலை வாமனா வரிகளில் ஜிப்ரான், குரு ஹரிராஜ் ஆகியோர் பாடியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com