சினிமாவில் 17ஆண்டுகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்

‘ராட்சசன்’ படத்திற்காக விஷ்ணு விஷாலுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
சினிமாவில் 17ஆண்டுகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்
Published on

வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் , லால் சலாம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், விஷ்ணு விஷால் சினிமாவில் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

‘ராட்சசன்’ படத்திற்காக விஷ்ணு விஷாலுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்ட அதே நாளில் அவர் சினிமாவுக்கு வந்து 17ஆண்டுகள் கடந்துள்ளதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கொண்டாடும் விதமாக அவருக்கு அவர் நடித்து வரும் ‘கட்டா குஸ்தி 2’ படக்குழு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com