விஷ்ணு விஷாலின் “ஆர்யன்” படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு


விஷ்ணு விஷாலின் “ஆர்யன்” படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Sept 2025 5:50 PM IST (Updated: 30 Sept 2025 11:53 AM IST)
t-max-icont-min-icon

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது.

சென்னை,

வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது.

இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைக்க விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

‘ஆர்யன்’ படம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற அக்டோபர் 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘ஆர்யன்’ படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story