விஷ்ணு விஷாலின் “இரண்டு வானம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிக்கும் ‘இரண்டு வானம்’ படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது.
விஷ்ணு விஷாலின் “இரண்டு வானம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து இவர், குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக ஆர்யன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘இரண்டு வானம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நிறைவடைந்து. தற்போது படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.இந்த படத்தை கோடை காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ‘இரண்டு வானம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘வெள்ளிச்சுடரே’ வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் மதராஜே வரிகளில் கபில் கபிலன் இப்பாடலை பாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com