‘ஹாய்’ படத்தை பார்த்தால் முகத்தில் ஸ்மைல் வரும்.. நயன்தாரா சொன்ன பாசிட்டிவ் விமர்சனம்!

இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 28-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘ஹாய்’ படத்தை பார்த்தால் முகத்தில் ஸ்மைல் வரும்.. நயன்தாரா சொன்ன பாசிட்டிவ் விமர்சனம்!
Published on

திருச்சி,

நேற்று திருச்சியில் நடைபெற்ற ‘ஹாய்’ திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை நயன்தாரா, “இது மிகவும் ஸ்வீட்டான படம். படத்தை பார்த்து முடிக்கும்போது கண்டிப்பாக உங்கள் முகத்தில் ஒரு ஸ்மைல் இருக்கும்” என்று தெரிவித்தார்.

நடிகர் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து ‘ஹாய்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

காதல் கதை

வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் ‘ஹாய்’ படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 28-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றது.

“மிகவும் ஸ்வீட்டான படம்”

இந்த நிலையில், நேற்று திருச்சியில் நடைபெற்ற ‘ஹாய்’ திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு படத்தைப் பற்றிய தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய நயன்தாரா, “இது மிகவும் ஸ்வீட்டான படம். படத்தை பார்த்து முடிக்கும்போது கண்டிப்பாக உங்கள் முகத்தில் ஒரு ஸ்மைல் இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், படத்தில் டிராமா அதிகமாக இருக்காது என்றும், அதேநேரத்தில் மிகவும் அழகான மற்றும் இனிமையான அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

“குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்”

சமீபகாலமாக ரசிகர்கள் அதிகளவில் ஆக்ஷன் படங்களை பார்த்து வருவதாக குறிப்பிட்ட நயன்தாரா, “ஒரு லவ் ஸ்டோரி, ஒரு குடும்பப் படம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. ‘ஹாய்’ திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்றும், அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும். மீண்டும் மீண்டும் பார்க்கலாம், அந்த மாதிரி இந்த படம் இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் ‘ஹாய்’ திரைப்படம் அனைத்து தரப்பினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com