‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ பட வசூலில் ரூ.500 கோடி பங்கு தரவேண்டும்- பாகிஸ்தான் மக்கள்

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படம் பாகிஸ்தானில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ பட வசூலில் ரூ.500 கோடி பங்கு தரவேண்டும்- பாகிஸ்தான் மக்கள்
Published on

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், சாரா அர்ஜுன் நடிப்பில் 'துரந்தர்-2' படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, இது வரை ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருகிறது.பாகிஸ்தான் நாட்டில் லயாரி பகுதியை மையமாக கொண்டு. அங்கு நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படங்கள் தயாராகி இருந்தது. இந்த படம் பாகிஸ்தானில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது லயாரி பகுதி மக்கள் விடுத்து வரும் வேண்டுகோள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது, "லயாரி பகுதியை மையமாக வைத்து படம் எடுத்து லாபம் பார்க்கும் 'துரந்தர்' படக்குழு, லயாரி பகுதி மக்களின் நலனுக்காக ரூ.500 கோடி நிச்சயம் பங்கு தரவேண்டும். அந்த பணத்தை கொண்டு லயாரியில் சாலை வசதிகள் போன்றவற்றை நாங்கள் செய்து கொள்கிறோம்" என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கிடையில் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் தெரிவித்துள்ள கமெண்ட்டுகள் கவனம் ஈர்க்கின்றன. அதாவது வசூலில் பங்கு தர தயார். ஆனால் நாங்கள் சொல்லும் பெயரை தான் உங்கள் சாலைகளுக்கு சூட்ட வேண்டும் என்று பதில் 'கமெண்ட்' அடித்து வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com