

திருவனந்தபுரம்,
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகராக இருப்பவர் மம்முட்டி. 74 வயதான மம்முட்டி தற்போதும் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு 74 வயது ஆகிவிட்டதா? 37 வயது இளைஞர் மாதிரிதானே இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு இளமையாக மம்முட்டி இருப்பதற்கு அவர் பின்பற்றும் உணவு பழக்க வழக்கமும், வாழ்க்கை நடைமுறைகளுமே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் சின்சியரான நடிகராக இருக்கும் மம்முட்டி, வெளி உணவுகளை சாப்பிட மாட்டார் என்றும், அவருக்கென பிரத்யேக சமையல் கலைஞரை எங்கு சென்றாலும் அழைத்து செல்வார் எனவும் திரைத்துறையினர் பலரும் கூறுவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், மம்முட்டியின் இளமை ரகசியம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, மம்முட்டி குறைந்த எண்ணெய் சேர்த்த அசைவ உணவுகளை மட்டும் அளவோடு சாப்பிடுகிறார். அவருக்கென தனி சமையல்காரர் நியமிக்கப்பட்டுள்ளார். தினமும் இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். முறையான உடற்பயிற்சி, ஆழ்ந்த வாசிப்பு மற்றும் சரியான நேரத்திற்கு உறங்குவது போன்ற மிகக் கடுமையான ஒழுக்கமே மம்முட்டியின் 'எவர் கிரீன்' தோற்றத்திற்குக் காரணம் என்று ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.