இளமையின் ரகசியம் குறித்த கேள்விக்கு ரவி மோகன் பதில்

ரவி மோகன், தற்போது 'பராசக்தி' படத்திலும், 'கராத்தே பாபு' படத்திலும் நடித்து வருகிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்திலும், 'கராத்தே பாபு' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட ரவி மோகனிடம் 'உங்கள் இளமையின் ரகசியம் என்னவென்று செய்தியாளர் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில்,
'அதிகமாக தண்ணீர் குடியுங்கள். அது நம் உடலை டீ ஹைட்ரேஷன் ஆகாமல் பார்த்துகொள்ளும். நான் காலையில் எழுந்ததும் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பேன். அதேபோல இரவும். அது இதற்கான ரகசியமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், இதைதான் செய்கிறேன். இதைத்தவிர வேறு எதுவும் பெரிதாக இல்லைங்க. எதோ அம்மா , அப்பா செய்த புண்ணியம்' என்றார்.
Related Tags :
Next Story






