

மும்பை,
பிரபல இந்தி நடிகை ஷெஹ்னாஸ் கில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தனக்கு ஆதரவாக இருந்த நடிகை மாஹி விஜ் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தன்னிடம் உடுத்துவதற்குக்கூட உடைகள் இல்லாத காலத்தில் மாஹி விஜ் உதவியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
‘பிக்பாஸ் 13’ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு தான் சந்தித்த கடினமான சூழல்களை நினைவுகூர்ந்த ஷெஹ்னாஸ் கில், மகிழ்ச்சியான தருணங்களிலும் சோகமான நேரங்களிலும் மாஹி விஜ் தனக்கு ஆதரவாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“என்னிடம் உடுத்துவதற்குக்கூட உடைகள் இல்லாத ஒரு காலம் இருந்தது. அப்போது மாஹி முன்வந்து எனக்கு நிறைய உதவினார். நான் சிரித்தபோது அவரும் என்னுடன் சிரித்தார். நான் அழுதபோது அவரும் என்னுடன் அழுதார். அவர் உண்மையிலேயே தூய்மையான மனம் கொண்டவர் ” என்று ஷெஹ்னாஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது பிக்பாஸ் 20 நிகழ்ச்சியில் மாஹி விஜ் கலந்துகொண்டுள்ளநிலையில், ஷெனாஸ் கில் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தங்களுக்கு இடையேயான பழைய பாசத்தையும், ஆரம்ப காலத்தில் மாஹி தனக்கு செய்த உதவியையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.