’ஒருபோதும் அந்த நடிகரிடம் உதவி கேட்க மாட்டேன்’ - பிரீத்தி ஜிந்தா

2004-ம் ஆண்டு சுனாமி பேரழிவு ஏற்பட்டபோது, பிரீத்தி ஜிந்தா தாய்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தார்.
’ஒருபோதும் அந்த நடிகரிடம் உதவி கேட்க மாட்டேன்’ - பிரீத்தி ஜிந்தா
Published on

மும்பை,

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர நடிகை பிரீத்தி ஜிந்தா, இக்கட்டான சூழ்நிலையில் தான் ஒருபோதும் உதவிக்கு அழைக்க விரும்பாத நபர் நடிகர் சைப் அலிகான் தான் என்று ஒரு நேர்காணலில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பிரீத்தி ஜிந்தா இதனை பகிர்ந்து கொண்டார். 2004-ம் ஆண்டு ஆசிய நாடுகளில் சுனாமி பேரழிவு ஏற்பட்டபோது, பிரீத்தி ஜிந்தா தனது நண்பர்களுடன் தாய்லாந்தின் பூகெட்டில் (Phuket) விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தார்.

Also Read
அனிஷ்மாவின் அடுத்த தமிழ் படம்... வெளியானது அறிவிப்பு
’ஒருபோதும் அந்த நடிகரிடம் உதவி கேட்க மாட்டேன்’ - பிரீத்தி ஜிந்தா

அப்போது சயீப் அலிகான் அனுப்பிய மெசேஜ் பற்றி பிரீத்தி ஜிந்தா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,

"சுனாமியால் அங்கு சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது, சைப் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில், 'ஹே பிரீத்தி ஜிந்தா, நீங்க தண்ணீருக்குள் இருக்கீங்களா என்ன?' (Hey, PZ, underwater or what?) எனக் கேட்டிருந்தார். எனக்கு அப்போது 'இவர் என்ன மாதிரியான ஆள்?' என்று தோன்றியது. இதன் காரணமாகவே, நான் கடத்தப்பட்டாலோ அல்லது ஏதேனும் ஆபத்தில் இருந்தாலோ, திரையுலகில் கடைசியாக கூட உதவிக்கு அழைக்க நினைக்காத நபர் சைப் அலிகான்’ என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.

பிரீத்தி ஜிந்தாவும் சைப் அலிகானும் 'கல் ஹோ நா ஹோ' (Kal Ho Naa Ho) மற்றும் 'சலாம் நமஸ்தே' (Salaam Namaste) ஆகிய வெற்றிப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பிரீத்தி ஜிந்தா மீண்டும் திரையுலகிற்குத் திரும்பி இருக்கிறார். ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் உருவாகும் "லாகூர் 1947" (Lahore 1947) என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தில் ஷபானா ஆஸ்மி, அலி பசல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com