அர்ஜுன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ படத்தின் டிரெய்லர் வெளியாவது எப்போது?

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ படம் வருகிற 26ம் தேதி வெளியாகவுள்ளது.
அர்ஜுன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ படத்தின் டிரெய்லர் வெளியாவது எப்போது?
Published on

நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவரது கருத்து தற்போது திரையுலகில் கவனம் பெற்று வருகிறது.

அர்ஜுன் தாஸின் வித்தியாசமான நடிப்பில் ‘கான் சிட்டி’

மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து கதாநாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் அவர், தற்போது அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். நகரத்தில் வாழும் நடுத்தர குடும்பத்தின் உணர்வுகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

டிரெய்லர் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருந்த நிலையில், தற்போது அதன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று மாலை 05.00 மணியளவில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com