யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடுங்க: நடிகர் சிவக்குமார்

சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்

யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடுங்க: நடிகர் சிவக்குமார்
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து, மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். நகரங்களிலும், கிராமங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். குடிமக்களை குடிகார பசங்களா ஆக்கியது போதும். குடும்பத்தோட முக்கிய கோடி கோடியா சொத்துகளை குவிக்காமல் கடைகோடி மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றனும். இலவச திட்டங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூடுவார்களா என்று தெரியாது. செய்தால் ரொம்ப சந்தோஷம். குடியினால் 40 சதவீத மக்கள் நாசமாக போய்க்கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com