10 வயது அதிகமான நடிகர் ரித்தேசுக்கு தாயாக நடித்தது ஏன்? நடிகை பாக்யஸ்ரீ பதில்

ரித்தேஷ் தேஷ்முக் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடித்துள்ள ‘ராஜா சிவாஜி’ திரைப்படம் ரூ. 101 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
Bhagyashree
Published on

சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ராஜா சிவாஜி’ திரைப்படம் மூலம் முதன்முறையாக மராத்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன். இந்த படத்தில் சாம்ராஜ் சாகாஜி போஸ்லே என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். ‘ராஜா சிவாஜி’ திரைப்படத்தில் அபிஷேக் ஒரு போர்வீரரின் உடையை அணிந்துகொண்டு, போர்க்களத்தில் கர்ஜித்தபடியும், சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் தோன்றுகிறார். ஜியோ ஸ்டுடியோஸ், மும்பை பிலிம் கம்பெனி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

நடிகர் ரிதேஷ் தேஷ்முக் இயக்கி ஹீரோவாக நடித்த ‘ராஜா சிவாஜி’ திரைப்படம் மராத்தி, இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சஞ்சய் தத், அபிஷேக் பச்சன், ஜெனிலியா, வித்யா பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வரலாற்று கதைக்களத்தில் அமைந்திருந்த ‘ராஜா சிவாஜி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் கதாபாத்திரத்தில் நடித்த ரித்தேசுக்கு வீரத் தாயாக பாக்யஸ்ரீ நடித்துள்ளார்.

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகரும் நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராஜா சிவாஜி’ படம். ரூ.101 கோடி வசூலைப் பெற்று சாதனை படைத்தது.

படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் கதாபாத்திரத்தில் நடித்த ரித்தேசுக்கு வீரத் தாயாக பாக்யஸ்ரீ நடித்திருந்தார். பாக்யஸ்ரீக்கு ரித்தேசைவிட 10 வயது குறைவு. வயது குறித்து பல்வேறு டிரோல்கள் அவருக்கு எதிராக சமூக வலைதள பக்கங்களில் எழுந்தது.

இதற்கு பதில் அளித்து பாக்யஸ்ரீ கூறுகையில், “சிறு வயதில் இருந்தே கதைகளாக கேட்டு வளர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது வேண்டாம் என்று சொல்வதற்கு எந்த கேள்வியும் விடாது. அது மட்டுமல்லாமல் படத்தில் இளம் வயது தாயாக நடித்திருந்தேன். இது மட்டுமல்ல சந்தோஷ் சிவன் என்னை அழைத்து மன்னிக்கவும் கேமரா தொழில்நுட்பம் மூலம் உங்களை வயதானவராக காட்ட வேண்டி இருந்தது. ஆனாலும் இளையவராக தெரிகிறீர்கள் என்று கூறினார். இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்” என்று கூறினார்,

X

Daily Thanthi
www.dailythanthi.com