மகேஷ் பாபுவின் பிறந்தநாளில் வெளியாகுமா ''எஸ்எஸ்எம்பி29'' பட அப்டேட்? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்


Will Mahesh Babu Fans Get An SSMB29 Update On His 50th Birthday?
x
தினத்தந்தி 28 July 2025 11:14 AM IST (Updated: 9 Aug 2025 2:18 PM IST)
t-max-icont-min-icon

வருகிற ஆகஸ்ட் 9 அன்று மகேஷ் பாபு தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

ஆர்.ஆர்.ஆர் பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கும் மகேஷ் பாபுவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ''எஸ்எஸ்எம்பி29'' படம், இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாமல் ரகசியமாகவே உள்ளது.

வருகிற ஆகஸ்ட் 9 அன்று மகேஷ் பாபு தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால், அன்று படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்.

இந்நிலையில், மகேஷின் பிறந்தநாளில் எந்த டீசரையோ அல்லது அறிவிப்பையோ வெளியிட படக்குழு திட்டமிடவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் நாள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் தற்காலிகமாக 'எஸ்எஸ்எம்பி 29' எனப்பெயரிடப்பட்டுள்ள படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இப்படம் ரூ. 1,000 கோடி பட்ஜெட்டில் உருவாவதாக கூறப்படுகிறது. இதில் பிருத்வி ராஜ், பிரியங்கா ஜோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

1 More update

Next Story