ரவி மோகனின் அடுத்த படத்தில் இத்தனை கதாநாயகிகளா?

இயக்குனர் கார்த்திக் யோகி ரவிமோகன் கூட்டணியில் உருவாக உள்ள படத்தில் 4 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.
ரவி மோகனின் அடுத்த படத்தில் இத்தனை கதாநாயகிகளா?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர் நடிகர் ரவி மோகன். இவர் தற்போது ணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து 'டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கு "ப்ரோகோட்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க உள்ள கதாநாயகிகள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் 4 நான்கு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com