கல்கி 2 படத்தில் தீபிகா படுகோனுக்கு பதிலாக இவரா?

ஒரு சில காரணங்களுக்காக கல்கி 2 படத்திலிருந்து தீபிகா படுகோன் வெளியேற்றப்பட்டார்.
கல்கி 2 படத்தில் தீபிகா படுகோனுக்கு பதிலாக இவரா?
Published on

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து 2024ம் ஆண்டு வெளியான படம் கல்கி 2898 ஏடி. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம், உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக அமைந்தது.

மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி 2898 ஏடி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.

முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில், படத்தில் இருந்து சில காரணங்களுக்காக தீபிகா படுகோன் வெளியேற்றப்பட்டார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தீபிகா படுகோன் நடித்த சுமதி கதாபாத்திரத்தில் நடிக்க ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி, ராஷ்மிகா என பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் தற்போது சாய் பல்லவி அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com