

சென்னை,
‘இந்தியன் 3’ படத்தை 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, ‘தர்மன்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றுவது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ராஷி கண்ணா, யோகி பாபு, ருக்மிணி வசந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு மருத்துவராக நடிக்கிறார். இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீட்டுத் தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 3’ திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, ‘தர்மன்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றுவது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் வெளியீட்டுக்குப் பதிலாக, ‘தர்மன்’ திரைப்படத்தை 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையின்போது வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், வெளியீட்டுத் தேதி மாற்றம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ‘இந்தியன் 3’ மற்றும் ‘தர்மன்’ படங்களின் வெளியீட்டுத் தேதிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.