“வித் லவ்” படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்த ‘வித் லவ்’ படம் பிப்ரவரி 6ந் தேதி வெளியாகிறது.
“வித் லவ்” படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
Published on

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக ‘வித் லவ்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் ‘அய்யோ காதலே’, ‘மறந்து போச்சே’ பாடல்கள் வெளியாகி வைரலானது. இப்படத்தின் டிரெய்லரை இயக்குநர் அட்லீ நேற்று வெளியிட்டார். இப்படம் பிப்ரவரி 6ந் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், ‘வித் லவ்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி பெற்றுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com