தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு அதிக மரியாதை - காஜல் அகர்வால்

தென்னிந்திய திரைப்படத் துறையின் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு அதிக மரியாதை - காஜல் அகர்வால்
Published on

தென்னிந்திய மற்றும் இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தென்னிந்திய திரைத்துறையின் பணிச்சூழல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது கருத்துகள் தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

தென்னிந்திய சினிமா மீது தனிப்பட்ட ஈர்ப்பு

இதுகுறித்து காஜல் அகர்வால் கூறுகையில், “தென்னிந்திய திரைப்படத் துறையின் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது. ஏனெனில், எனது திரையுலக பயணம் இங்கிருந்துதான் தொடங்கியது. இங்கு பணிபுரிவதில் ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கிறது. குறிப்பாக, வேலை நேரம் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். பொதுவாக 9 மணி நேரத்திற்கும் மேல் பணிகள் நடைபெறாது. நேரத்தை சரியாக கடைபிடிப்பதிலும், தொழில்முறை ஒழுக்கத்திலும் தென்னிந்திய சினிமா முன்னுதாரணமாக உள்ளது,” என்றார்.

பாலிவுட்டில் கிடைக்காத சவுகரியம்

மேலும் அவர் கூறுகையில், “பாலிவுட்டில் எனக்குக் கிடைக்காத ஒரு விதமான சவுகரியமும், மரியாதையும் தென்னிந்திய திரைப்படத் துறையில் கிடைக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கப்படுகிறது. பாதுகாப்பான மற்றும் மதிப்புமிக்க பணிச்சூழல் நிலவுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வாலின் இந்தப் பேச்சு, தென்னிந்திய திரைத்துறையின் தொழில்முறை அணுகுமுறையை மீண்டும் ஒருமுறை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com