“இப்படிப்பட்ட பெண்களால்தான்’’...நடிகையின் உடை குறித்து பாடகர் சர்ச்சை பதிவு

குஷி முகர்ஜி குறித்து ராப்பர் சாண்டி சர்மா வெளியிட்ட கருத்துகள் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
“இப்படிப்பட்ட பெண்களால்தான்’’...நடிகையின் உடை குறித்து பாடகர் சர்ச்சை பதிவு
Published on

மும்பை,

பாலிவுட் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர், குஷி முகர்ஜி. சமீபகாலமாக இவர் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் உடை அணிந்திருக்கிறாரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அந்தளவு கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், குஷி முகர்ஜி குறித்து ராப்பர் சாண்டி சர்மா வெளியிட்ட கருத்துகள் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் குஷி முகர்ஜி பொது இடத்தில் சற்று கவர்ச்சியான உடை அணிந்து தோன்றியிருந்தார். அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

Also Read
இணையத்தை கலக்கும் சாய் அபயங்கரின் ‘பவழ மல்லி’பாடல்
“இப்படிப்பட்ட பெண்களால்தான்’’...நடிகையின் உடை குறித்து பாடகர் சர்ச்சை பதிவு

அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ராப்பர் சாண்டி சர்மா சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். அதில், “இப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால்தான் இந்தியாவில் பாலியல் குற்றங்கங்கள் அதிகரிக்கின்றன. குழந்தைகளும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். அதனால் நல்ல விஷயங்களையே பதிவிட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “இப்படிப்பட்ட காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்வது சரியல்ல. குழந்தைகளும் இதைப் பார்க்கலாம். இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருக்க வேண்டும். வரும் தலைமுறையின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும்,” என்றும் அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.

பலரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவுகள் செய்து வருகின்றனர்.

இதுவரை குஷி முகர்ஜி இந்த விவகாரம் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் உடை அணிவதில் அமெரிக்க பாடகி ஜெனிபர் லோபஸ் தான் தனது முன்மாதிரி என்று அவர் முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com