பெண்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - ராஷி கன்னா

மற்றவர்களுடன் ஒப்பிடாமல் சத்தான உணவுகளை முறையாக உட்கொள்ள வேண்டும் என்று ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.
ராஷி கன்னா
கோப்புப்படம்
Published on

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியான ராஷி கன்னாவின், அலட்டல் இல்லாத நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழ் தாண்டி இதர மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் ராஷி கன்னா, சமீபத்தில் உடல் ஆரோக்கியம் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளன.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, "பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். எனது 20 வயதுகளில் உடல் தோற்ற பொலிவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனால் 30-களில் ஆரோக்கியமாக உணர்வதே உண்மையான உடற்தகுதி என்பதை புரிந்து கொண்டேன்.

உடல் எடையை குறைக்க நினைக்கும் பெண்கள் 'கிராஷ் டயட்' முறைகளை தவிர்க்க வேண்டும். தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் சத்தான உணவுகளை முறையாக உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமே நம் எதிர்கால வாழ்வுக்கு அடிப்படை என்பதை உணர்ந்து கொள்வது கட்டாயமானது ஆகும்”, என்று குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com