20 கோடி பார்வைகளை கடந்த யாஷின் “டாக்ஸிக்” டீசர்
யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படம் வருகிற மார்ச் 19-ம் தேதி வெளியாகிறது.
நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. . இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது. இதையடுத்து நடிகர் யாஷ்-க்கு கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உருவானது.
இவர் தற்போது இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகி வரும் இந்த படம் மார்ச் 19ந் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் யாஷின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் அறிமுக டீசர் வெளியானது. இதில், யஷ் ஒரு பெண்ணுடன் காருக்குள் நெருக்கமான உறவில் இருப்பதும் பின், வெளியே வந்து எதிரிகளைக் கொடூரமாகத் தாக்குவதுமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவில் யாஷின் பெயர் ‘ராயா’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘டாக்ஸிக்’ டீசர் இதுவரை 20 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. யூடியூபில் 8 கோடி பார்வைகளையும், பிற சமூக வலைதளங்களில் 12 கோடி பார்வைகளையும் கடந்துள்ளது. டீசர் உருவாக்கிய எதிர்பார்ப்பு படத்தின் மீது இருப்பதால் ‘டாக்ஸிக்’ ரிலீசுக்கு காத்திருக்கின்றனர்.







